சனி, ஞாயிறு ஓய்வு முடிந்து திங்கள் வந்தாலாவது பேசுவாரா முதல்வர்..?ஸ்டாலின் கேள்வி..!!
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு;
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் வரம்புமீறலால் (Judicial Overreach) மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழக முதல்வர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை?
சனி, ஞாயிறு வார இறுதி ஓய்வு முடிந்து திங்கள் வந்தாலாவது பேசுவாரா? அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு கலெக்டரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்தது தான் இப்போதுள்ள முதல்வரின் நிர்வாகத் திறன்!
மக்களின் பொழுதை போக்கும் நடிகர் முதல்வர் ஆனால் தமிழகம் காப்பாற்றப்படும் என இரவோடு இரவாக தாவிச் சென்ற கட்சிகள் அவரிடம் எந்த கருத்தும், பொறுப்புக்கூறலையும் கோராமல் திமுகவை பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்?
நீதித்துறை வரம்புமீறலால் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரை நூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட திமுகவுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை.
ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மத நல்லிணக்கத்தையும் நிலைநாட்டிடத் திமுக என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும், வெல்லும்.
இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

