இனி பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை?

 
இனி பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை?

பண்டிகை நாட்களில் டாஸ்மாக் விடுமுறை அளிக்க தமிழக அரசு ஆலோசனை செய்துவருகிறது. 

பண்டிகை தினம், அதற்கு முந்தைய நாளில் டாஸ்மாக் கடையை மூட முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசனை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கவே இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பண்டிகை நாட்களிலும் விடுமுறை அளிப்பது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் விடுமுறை அளிக்கப்படவுள்ளது.