இதற்கு ஸ்டாலின் பதில் சொல்லுவாரா..? இபிஎஸ் கேள்வி..!

 
1

தேனி மாவட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ்: 

முல்லைப்பெரியாறு அணையில் நீர்தேக்குவதை உயர்த்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்ட போராட்டம் நடத்தி 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தினார். அணையை பலப்படுத்தி 152 அடி உயர்த்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அணையை பலப்படுத்த ரூ.8 கோடிக்கு டெண்டர் விட்டு பணியை துவங்கிய போது அதிகாரிகள் மீது, கேரள அரசு வழக்குப்பதிவு செய்தது. கேரள அரசுடன் பேச்சு நடத்தினோம். அதற்குள் ஆட்சி மாற்றம் நடந்து விட்டது. 

தி.மு.க., கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் தான் கேரளாவில் ஆட்சி செய்கிறது. ஆனால், இன்று வரை தமிழக விவசாயிகளுக்காக கேரளா முதல்வருடன் ஸ்டாலின் பேசவில்லை. அவர் நினைத்திருந்தால், கேரள முதல்வருடன் பேசி தீர்வு கண்டிருக்கலாம். அவர் பேசாதது ஏன்?ஹிந்தி திணிப்பைக் கொண்டு வந்த காங்.,குடன் தி.மு.க., சந்தர்ப்பவாத கூட்டணி வைத்துள்ளது. 

தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு புதிய திட்டம் ஏதும் இல்லை. பயிர்க்கடன் தள்ளுபடி இல்லை. தமிழகத்தில் 2021 வரை 73 ஆண்டு கால வரலாற்றில், ஆட்சி செய்த கட்சிகள் ரூ. 4.85 லட்சம் கோடி கடன் வாங்கின. ஆனால் ஸ்டாலின் அரசு, 5 ஆண்டுகளில் ரூ. 5லட்சம் கோடி கடன் வாங்கி அனைவரையும் கடனாளியாக்கி உள்ளது.சின்னமனுாரில் அமைச்சர் ஒருவர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களை சேதப்படுத்தி விளைநிலைங்களை தரிசு நிலங்களாக மாற்றி உள்ளார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் இதற்கு தீர்வு காணப்படும். 

இவ்வாறு இபிஎஸ் பேசினார்.