நடிகை விஜலட்சுமி அளித்த புகாரில் சீமான் வருகிற 12ம் தேதி காவல் நிலையத்தில் ஆஜர்?

 
seeman vijayalakshmi

நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 12ம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காலை 10.30  மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர்.  அதில், விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை  நடத்தப்பட்டு வருகிறது.  இந்த வழக்கில் தங்களை விசாரணை செய்ய வேண்டியுள்ளது அவசியமாகிறது.  எனவே தாங்கள் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் சாலையில் உள்ள ஆர் 9 வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 09/09/23 இன்று காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராக அறிவுறுத்தப்படுகிறது என்று காவல் ஆய்வாளர் சம்மன் அனுப்பி இருந்தார். ஆனால் சீமான் நேற்று ஆஜராகவில்லை. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால் வழக்கில் ஆஜராக அவகாசம் வழங்கும்படி சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

seeman


 
இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 12ம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 12ம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளார்.