இன்று திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படுமா..? பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்..!

 
1

தமிழ்நாட்டில் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு டிசம்பர் 20ம் தேதியுடன் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்துவிட்டது. இதேபோல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் டிசம்பர் 23-ந்தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தது. மெட்ரிக் பள்ளிகளுக்கு 21ம்தேதி முதலும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் டிசம்பர் 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. அனைத்து பள்ளி மாணவர்களும் அரையாண்டு விடுமுறையில் இருந்து வந்தனர். அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2-ந்தேதி மீண்டும் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதன் மூலம் மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைத்தது. 2024-ம் ஆண்டு முடிந்து இன்று 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்திருக்கிறது.

இந்நிலையில், ஜனவரி 2-ந்தேதியான நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ளது. விடுமுறை முடிந்து இன்று மாணவர்கள் பள்ளிக்கு திரும்ப உள்ளார்கள். இந்நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை முடிவடைந்து வியாழக்கிழமை(2-ம் தேதி) பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் சூழலில், பள்ளிகள் திறப்பு இன்னும் நான்கு தினங்கள் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வேகமாக பரவின. வியாழக்கிழமை பிறகு வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் மட்டுமே வேலை நாளாகவும் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறையாகவும் வந்துள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்று வதந்திகள் பரவின, இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழக பள்ளிகல்வித்துறை, அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.