தமிழகத்திற்கு பதில் ஆந்திராவுக்கு செல்கிறதா ₹15,000 கோடி முதலீடு?

 
1

மத்திய அரசின், 'மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ்' நிறுவனம் துாத்துக்குடியில், 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக வழிகாட்டி நிறுவனத்துடன் குஜராத்தில், 2025 செப்டம்பரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. 

துாத்துக்குடியில் நிலம் ஒதுக்கீட்டில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால், மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனம் தமிழகத்திற்கு பதில், ஆந்திராவில் முதலீடு செய்ய இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, இந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் இம்மாதம், 11ம் தேதி சந்தித்து பேசியுள்ளனர்.இச்சந்திப்பின் போது, 'நாட்டின் கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் கடல்சார் தொழில் துறை வளர்ச்சியில் ஆந்திரா பங்களிக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது' என, அந்நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர். 

இதையடுத்து, துாத்துக்குடி மாவட்டத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்க ஒப்பந்தம் செய்த நிறுவனத்தின் முதலீடு, ஆந்திர மாநிலத்திற்கு செல்வதாக தெரியவந்துள்ளது.