இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி!!

 
election

இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு 

election
நாடு முழுவதும் இன்னும் சில மாதங்களில்  நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மின்னணு இயந்திரங்களை சரிபார்த்தல், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல், வாக்குச்சாவடிகளை தயார் செய்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.  ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெறும்.  இதில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் ,  நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.  அந்த வகையில்  வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கியது.  வரைவு வாக்காளர் பட்டியலும் அன்றே வெளியிடப்பட்டது. அன்று முதலே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கம் செய்யவும் முகவரி மாற்றம் மற்றும் திருத்தவும் மனுக்கள் பெறப்பட்டன.

வாக்காளர் பட்டியல்

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு.  வரைவு வாக்காளர் பட்டியலில் 6.11 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.