இன்று மருந்துக் கடைகள் திறந்திருக்குமா..? அமைச்சர் அருண்ராஜ் சொல்வதென்ன..?

 
1

நாடு முழுவதும் இன்று மருந்துக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மருந்தக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.இதற்கு தமிழ்நாட்டில் 35 ஆயிரம் மருந்துக் கடைகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அசோக் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசுகையில், ''அரசு மருத்துவமனையில் கூட்டிணைவில் உள்ள மருந்துக் கடைகள் செயல்படும். அதேபோல தனியார் மருத்துவமனைகளில் கூட்டிணைவில் உள்ள அனைத்து மருந்துக்கடைகளும் செயல்படும்.பந்தில் ஈடுபடக்கூடிய மருந்துகளை அசோசியேஷன் கூடவும் நாங்கள் பேசி வருகிறோம், ஒவ்வொரு மாவட்டத்திலும் கோஆர்டினேட் பண்ணக் கேட்டிருக்கிறோம். பொதுமக்களுக்கு ஏதாவது எமர்ஜென்சிக்கு மருந்து தேவை என்றால் பொது மக்கள் அவர்களுடைய எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பேசலாம்.

தமிழகத்தில் இன்று 5000 மருந்துக் கடைகள் திறந்திருக்கும். நாளை மருந்துக் கடைகள் மூடப்படும் நிலையில் மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றிய அரசு எந்த மாதிரியான முடிவெடுப்பார்கள் என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இது உயிர் சம்பந்தப்பட்ட துறை என்பதால் கடையடைப்பை நடத்தும் தரப்பும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். எமர்ஜென்சிக்கு மருந்து தேவைப்பட்டால் ஏற்பாடு செய்ய சுகாதாரத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம். பொதுமக்களுக்கு தேவையான அவசரக்கால மருந்துகள் அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்'' என்றார்.