அமித்ஷா கலந்துகொள்ளும் மாநாட்டுக்கு அனுமதி மறுப்பா?- காவல்துறை விளக்கம்
பாஜகவினர் உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்புவதாக நெல்லை மாநகர காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்திற்குப்பட்ட பகுதியில் பாஜக சார்பில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்த மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி மறுப்பதாக கூறி பாஜகவினர் செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். மாநாட்டிற்கு காவல்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அறிவுறுத்தல்படி விளம்பர பதாகைகள் மற்றும் பேனர் வைப்பதற்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள.
இந்நிலையில் காவல்துறை சார்பில் மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என நெல்லை மாநகர காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.



