ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ பன்னீர் செல்வம் ஜெயிப்பாரா ? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்..!

 
1

கடந்த ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு அன்றைய தினம் ஓட்டுப்பதிவு நடந்தது.

டைம்ஸ் நவ் - ETG நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 34 இடங்களிலும், பாஜக கூட்டணி 3 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 2 இடங்களில் வெல்லக்கூடும் என அந்த எக்ஸிட் போல் முடிவு தெரிவிக்கிறது.

மேலும், வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, திமுக கூட்டணி 52 %, பாஜக கூட்டணி 16 %, அதிமுக கூட்டணி 25 சதவீதம் வாக்குகளைப் பெறும், மற்ற கட்சிகள் 7 சதவீதம் வாக்குகளைப் பெறுவார்கள் என டைம்ஸ் நவ் - ETG நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராக ஓ பன்னீர் செல்வம் களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் மீண்டும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சிட்டிங் எம்பி நவாஸ் கனி போட்டியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திரபிரபா, அதிமுக சார்பில் ஜெய்பெருமாள் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

இதில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நூலிழையில் திமுக கூட்டணி வேட்பாளர் இந்தியன் முஸ்லிம் லீக் வேட்பாளரான சிட்டிங் எம்பி நவாஸ் கனியிடம் தோல்வியடைவார் என தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த தொகுதியில் திமுக கூட்டணியின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனிக்கு வெற்றி வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவாஸ் கனிக்கு 35 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் எனவும், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு 33 சதவீத ஓட்டுகள் பெறுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.