போட்டியின்றி தேர்வாகிறார் நயினார் நாகேந்திரன்?

 
s

பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

nainar nagendran

பாஜக தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அவர், பாஜக மாநில தலைவராக போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்கும் நபர் நாளை பதவியேற்பார் எனக் கூறப்படுகிறது.

நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாவதை உறுதி செய்யும் விதமாக அமித்ஷா செய்தியாளர்களை சந்திக்கும் அரங்கின் பின்னணியில் உள்ள திரையில் நயினார் நாகேந்திரன் படமும் இடம்பெற்றுள்ளது.