இப்படி கூட மரணம் வருமா ? விஷக் குளவி கொட்டியதில் தவில் கலைஞர் மரணம்..!

 
1

வாணியம்பாளையம் கெங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கோபு (55) என்பவர் தவில் வாசிக்க அழைக்கப்பட்டிருந்தார். இந்நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அருகே இருந்த மரத்தில் குளவிகள் கூடுகட்டி இருந்துள்ளன. இந்நிலையில், அந்த கூட்டில் இருந்து விஷக் குளவிகள் திடீரென பறந்து வந்து அங்கிருந்தவர்களை கொட்டத் தொடங்கின. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

தொடர்ந்து அவர்களை விஷக் குளவிகள் துரத்தி சென்று கொட்டின. இதில், தவில் கலைஞர் கோபு உட்பட 20 பேர் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிகிச்சை பலனின்றி தவில் கலைஞர் கோபு உயிரிழந்தார். குளவி கொட்டியதால் பாதிக்கப்பட்ட மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.