இப்படி கூட மரணம் வருமா ? சிரித்து கொண்டிருந்த மாணவி திடீரென உயிரிழப்பு!

 
1

தென்காசியை சேர்ந்தவர் பிரகாஷ் (40). இவர் கேரளாவில் சலூன் கடை  வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மீனா (35). இந்த தம்பதிக்கு 14 வயதில் மானஷா என்ற மகள் இருந்துள்ளார். இவர் சுரண்டையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் இருந்து தினமும் பள்ளிக்கு சைக்கிளில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மானஷா வழக்கம் போல தனது வீட்டில் இருந்து சைக்கிளில் பள்ளிக்குச் சென்றார். அங்கு வகுப்பறையில் சக மாணவிகளுடன் பேசி சிரித்து கொண்டிருந்த போது திடீரென மயங்கியுள்ளார். இதனை கண்டு சக மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து ஆசிரியர்கள் சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை மோசமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் செல்லும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.