இப்படி கூட மரணம் வருமா ? பொருட்காட்சியில் சரிந்து விழுந்த ராட்டினம்; இன்ஸ்பெக்டர் பலி..!

 
1 1

ஹரியானாவில் சூரஜ்குன்ட் கண்காட்சியில் ராட்சத ராட்டினம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ராட்டினத்தில் கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள் ஏறி மகிழ்ச்சியுடன் விளையாடினர். ராட்டினமும் தலைகீழாக சுற்றிக் கொண்டு இருந்தது. அப்போது அந்த ராட்சத ராட்டினம் எதிர்பாராதவிதமாக சரிந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தின் போது அங்கு பணியில் இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜக்தீஷ் பிரசாத் என்பவர் ராட்டின இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் படுகாயம் அடைந்தார். அவரை அங்குள்ளோர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். 

இந்த விபத்தில் ராட்டினத்தில் இருந்தவர்களில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். முன்னதாக, இதே கண்காட்சி திடலின் 2வது வாயில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் குழந்தை உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.