கிருஷ்ணா தண்ணீருக்காக ஆந்திராவுக்கு செல்கிறார் முதல்வர் விஜய்?

 
vijay

சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீரை பெறுவதற்காக முதல்வர் விஜய் நாளை ஆந்திரா செல்ல உள்ளார். 

ஆந்திரா செல்லும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து பேச உள்ளார். கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி, ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் மொத்தம் 12 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். ஜூலை முதல் அக்டோபர் வரை: 8 டிஎம்சி தண்ணீர், ஜனவரி முதல் ஏப்ரல் வரை:  4 டிஎம்சி தண்ணீர் விட வேண்டும். இந்த தண்ணீரை திறந்து விடக்கோரியே முதல்வர் விஜய் நாளை ஆந்திரா செல்ல உள்ளார்.

பருவமழை பொய்த்ததால் பூண்டி, புழல் உள்ளிட்ட ஏரிகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க, கிருஷ்ணா நதி நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. இந்த நிலையில், இந்த பிரச்சனைக்கு நேரடியாக தீர்வு காணும் வகையில், முதல்வர் விஜய் நாளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அமராவதியில் சந்தித்து பேச இருக்கிறார். இந்த சந்திப்பின் போது கிருஷ்ணா நீர் மட்டுமின்றி, இரு மாநில நல்லுறவு குறித்தும் பேசப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் விஜய்யின் இந்த திடீர் ஆந்திர பயணம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.