அண்ணா பிறந்தநாளில் கட்சி தொடங்கும் அண்ணாமலை?
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை 'we the leaders' இயக்கத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளார். உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை சுமார் 18 லட்சம் பேர் இயக்கத்தில் இணைந்துள்ளனர். 2029 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவேன் என அண்ணாமலை ஏற்கனவே அறிவித்திருந்தார்.
பாஜகவில் இருந்தபோது மத அடையாளம் காரணமாக தயக்கம் காட்டிய பல நடுத்தர வர்க்க விவசாயிகள், வணிகர்கள் மற்றும் இளைஞர்கள், இப்போது அண்ணாமலை தனி கட்சியை வரவேற்கும் வாய்ப்புகள் அதிகம். கொங்கு மற்றும் இடைநிலை ஓபிசி சமூகங்கள், பாரம்பரியமாக அதிமுக-திமுக இடையே மாறி மாறி வாக்களித்து வந்துள்ளன. இந்த வாக்குகளை தன் பக்கம் ஈர்ப்பதே அண்ணாமலையின் முக்கிய இலக்கு. மேலும், படித்த நடுத்தர வர்க்கம், நகர்ப்புற இளைஞர்கள், ஊழலுக்கு எதிரான அரசியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான நிர்வாகம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்களை இலக்காக்கி அண்ணாமலை பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். தமிழக அரசியலில் இனி மும்முனைப் போட்டி உருவாகும் என்பது உறுதியாகியுள்ளது. ஒருபுறம் தவெகவின் தலித்-மைனாரிட்டி கோட்டை, மறுபுறம் ஓபிசி-எம்பிசி வாக்குகளுக்கான திமுக, அதிமுக மற்றும் அண்ணாமலை இடையேயான கடுமையான போராட்டம். இந்தப் போட்டி எதிர்கால தமிழக அரசியலை தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

