விஜய் சாதனையை முறியடிப்பாரா அண்ணாமலை..?
ஆதரவாளர்கள் விவகாரத்தில் விஜய் சாதனையை முறியடிப்பாரா அண்ணாமலை என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்காக அரசு பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியது. இந்தத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வாக்களிக்கலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளதை கண்டு பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். நடிகர் விஜய் வருவதற்கு முன்னதாகவே அண்ணாமலை இது போன்று தணிக்கச்சி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. ஆனால் மாற்றம் என்பது சாத்தியமா என்ற குழப்பத்தால் அவர் கட்சியை ஆரம்பிப்பதில் சிக்கல் இருந்து வந்தது. தற்போது தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜக இருந்த போதிலும் மக்கள் மத்தியில் கட்சியினருக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இதனால் பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்க அண்ணாமலை முடிவு செய்தார்.
அதன்படி அண்ணாமலையின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் தனது புதிய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். அவருடைய இயக்கத்தில் பலரும் ஆர்வமுடடன் இணைந்து வருகின்றனர். அவர் தொடங்கிய WE THE LEADERS பக்கத்தில் 6 மணி நேரத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். குறிப்பாக தற்போது அந்த இயக்கத்தில் இணைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக விஜயின் தவெக-வில் 24 மணி நேரத்தில் 30 லட்சம் பேர் இணைந்த சாதனையை அண்ணாமலை முறியடிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

