திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா?
Nov 23, 2026, 11:19 IST1795412948710
கார்த்திகை தீபத்திருநாள் அன்று திருப்பரங்குன்றத்தில் தீபம் கண்டிப்பாக ஏற்றப்படும்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஒரு முறை தீபம் ஏற்றும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. அந்த மனு இன்று விசாரணைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீதிபதிகள் அரவிந்த் குமார், விப்புல் பஞ்சோலி அமர்வு இன்று இல்லை என்பதால் மறு சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாளை மறுசீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் வராது என்று கூறுகிறார்கள். காரணம் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் விடுமுறை. அதுமட்டுமின்றி, குருநானக் ஜெயந்தி என்பதால் நாளை உச்சநீதிமன்றம் விடுமுறை. ஆகவே நாளை மாலை கண்டிப்பாக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும்.

