மகளிர் உரிமைத்தொகை 50% பயனாளிகள் நீக்கமா? உண்மை இது தான்..! தமிழக அரசு அதிரடி விளக்கம்!

 
1

மகளிர் உரிமைத்தொகை திட்டப் பயனாளிகள் நீக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் 

:மகளிர் உரிமைத் தொகையாக, தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும், மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இம்மாதத்திற்கான தொகை, 14ம் தேதி, ஒரு கோடியே, 29 லட்சத்து, 97,568 பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட, 17 லட்சம் பயனாளிகளில், 50 சதவீதம் பேர் நீக்கப்பட்டதாக வெளியான செய்தி தவறானது.

இரண்டாம் கட்ட பயனாளிகளை பெருமளவில் நீக்க, நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இத்திட்டத்திற்கான அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி, பல்வேறு அரசு துறைகளின் தரவுகளுடன், பயனாளிகளின் விபரங்கள் சரி பார்க்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் வழக்கமான புதுப்பித்தல் பணி நடக்கிறது. இது திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதலே நடந்து வருகிறது.

பயனாளிகளில் யாரேனும் இறந்தால், திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயன்பெற தகுதியவற்றவர்களாக மாறி இருந்தால், அல்லது தாங்களாகவே திட்டத்தில் இருந்து விலக விருப்பம் தெரிவித்தால், அந்த விபரங்களின் அடிப்படையில், பயனாளிகள் பட்டியல் ஒவ்வொரு மாதமும், உரிய முறையில் புதுப்பிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையின்படி, எவ்வளவு பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர் என்ற விபரத்தை, அரசு தெரிவிக்கவில்லை.