#BIG NEWS : 31 பேரின் அரசு வேலை பறிபோகுமா? உச்சநீதிமன்றம் கொடுத்த அல்டிமேட் தீர்ப்பு!

 
Q

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கு வதற்கான நியமன ஆணைகள் கடந்த மாதம் 10-ந்தேதி வழங்கப்பட்டன. இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நிர்வாகி தீரன் திரு முருகன், மதுரையைச் சேர்ந்த சீனி முகமது, திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

 

இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதற்கான அரசாணையை ரத்து செய்து கடந்த மாதம் 27-ந்தேதி உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.பி.பார்த்திவாலா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கியதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? அரசு பணி வழங்கக் கூடாது என்று கூற நீங்கள் யார்? என்று மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் என்பது துயரமான நிகழ்வு, இதில் அரசியல் செய்யக்கூடாது என்று கூறியதோடு ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.