#BREAKING விவசாயிகளுக்கு 18 மணி நேர இலவச மின்சாரம் தொடருமா?- மின்வாரியம் விளக்கம்
விவசாயிகளுக்கு 18 மணி நேர இலவச மின்சாரம் தொடரும் என தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இலவச மும்முனை மின்சார நேரம் 14 மணி நேரமாக குறைக்கப்படுவதாக ஆங்கில நாளிதழில் வெளியான செய்திக்கு தமிழக மின்சார வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின்சார விநியோக நடைமுறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. விவசாய பம்ப் செட்களுக்கு இலவச மும்முனை மின்சாரம் நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்படுகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை எனக் கூறியுள்ளது. மேலும் மின் கட்டமைப்பில் எதிர்பாராமல் ஏற்படும் தொழில்நுட்ப சவால்கள், அவசர பராமரிப்பு பணிகள் காரணங்களினால் மட்டுமே ஒரு சில மணி நேரன்களுக்கு தற்காலிக மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய தற்காலிக இடையூறுகளைத் தவிர விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு 18 மணிநேர இலவச மும்முனை மின்சார வழங்கும் நடைமுறையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும், இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பதை மின்வாரியம் கூறியுள்ளது.

