14 நாட்கள் தனிமைப்படுத்தபட்ட கணவர் சென்னை சொகுசு விடுதியில் மரணம் : மனைவி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!

 

14 நாட்கள் தனிமைப்படுத்தபட்ட கணவர்  சென்னை சொகுசு விடுதியில் மரணம் : மனைவி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!

வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி கடந்த சில மாதங்களாக துரிதமாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மே 7ம் தேதி வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களில் மூலம் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி அழைத்து வரப்பட்டவர்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்ப தனியார் விடுதி, அரசு காப்பகம் என தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதன்படி கடந்த ஜூன் 25ஆம் தேதி சிங்கப்பூரில் சிக்கித்தவித்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் சொகுசு விடுதி ஒன்றில் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டார். இதுகுறித்து அவர் தனது மனைவியிடம் தகவல் தெரிவித்ததாக தெரிகிறது.

14 நாட்கள் தனிமைப்படுத்தபட்ட கணவர்  சென்னை சொகுசு விடுதியில் மரணம் : மனைவி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!

இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக ராஜேந்திரன் அவருடன் மனைவியிடம் தொலைபேசியில் பேச வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அவர் மனைவி இதுகுறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன் இணையத்தில் தேடி சம்பந்தப்பட்ட சொகுசு விடுதியில் தொடர்பு எண்ணை கண்டுபிடித்து பேசியுள்ளார். அதில் ராஜேந்திரனை கடந்த ஒன்றரை நாட்களாக காணவில்லை என விடுதி நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஜேந்திரனின் மனைவியை தொடர்பு கொண்ட விடுதி நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களாக வயிற்று வலியில் அவதிப்பட்டு வந்த அவர் கழிவறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்ததாக கூறியுள்ளனர்.

14 நாட்கள் தனிமைப்படுத்தபட்ட கணவர்  சென்னை சொகுசு விடுதியில் மரணம் : மனைவி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!

இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தவுடன், அவர்கள் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மேலும் கணவரின் உடலை சென்னைக்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு தேனாம்பேட்டை போலீசார் ராஜேந்திரனின் மனைவியிடம் தெரிவித்ததாக தெரிகிறது.

இது குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள ராஜேந்திரனின் மனைவி தனது கணவரின் மரணத்தில் எனக்கு சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவரை கண்காணிப்பது அரசின் கடமை. அத்துடன் தனது ஹோட்டலில் தங்கி இருப்பவர்களையும் கவனித்துக்கொள்ளும் கடமை அந்த நிறுவனத்தைச் சேர்ந்தது. ஆனால் அவர் ஒன்றரை நாட்களாக காணாமல் போன நிலையில் அவர் அறையில் இருக்கிறாரா இல்லையா என்பது கூட தெரியாமல் விடுதி நிர்வாகம் இருந்துள்ளது. பின்னர் அவர் தங்கியிருந்த அறையில் இறந்து விட்டார் என்று கூறுகின்றனர். இதனால் எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது’ என பல குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்துள்ளார்.

14 நாட்கள் தனிமைப்படுத்தபட்ட கணவர்  சென்னை சொகுசு விடுதியில் மரணம் : மனைவி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!

ஆனால் இது குறித்து கூறியுள்ள தேனாம்பேட்டை காவல்துறையினர் ராஜேந்திரன் கழிவறையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகு ராஜேந்திரன் கொரோனா பாதிக்கப்பட்டு இருந்தாரா என்பது தெரியவரும் என்று கூறியுள்ளனர்.