கணவருக்கு வேறு ஒருவருடன் தொடர்பு- திருமணமான 2 வாரத்தில் மனைவி தற்கொலை

 
suicide

கரூரில் திருமணமாகி இரண்டு வாரத்தில் இளம்பெண் ஒருவர், கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக உருக்கமாக வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது. 

Young girl commits suicide within two weeks of marriage in Karur TNN Crime: கரூரில் திருமணமாகி 2 வாரத்துக்குள் புதுப்பெண் தற்கொலை

கரூர், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகபிரியா (27). இவர் பொரணியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும்,  சுதர்சன் என்பவருக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் சுதர்சனுக்கும், ரம்யா என்ற பெண்ணிற்கும் இடையே தகாத உறவு இருந்ததாக ராகபிரியாவிற்கு தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ராகபிரியா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தாந்தோன்றிமலை போலீசார் சம்பவ இடத்தற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.தனது தற்கொலைக்கு கணவர் சுதர்சன் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, ராகபிரியா உருக்கமான வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. சம்பவம் குறித்து கரூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். இதையடுத்து தாந்தோன்றிமலை போலீசார் சுதர்சனனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.