தலைவலியால் மூளைச்சாவு! 6 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த டீ மாஸ்டர் மனைவி

 
mu

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த குடியாத்தம் டீ மாஸ்டர் மனைவியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

சத்யா

வேலூர்மாவட்டம், குடியாத்தம் எழில்நகரை சேர்ந்தவர் டீக்கடை மாஸ்டர் சசிக்குமார். இவரது மனைவி சத்யா (41). இவர் தலைவலியின் காரணமாக கடந்த 17 ஆம் தேதி வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மூளைசாவு அடைந்தார். 

அரசு சார்பிலும் உரிய மரியாதை

அவரின் உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்ய முன் வந்ததால், இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம் சென்னை மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் சிறுநீரகம்  மற்றும் கண்கள் சி.எம்.சி மருத்துவமனைக்கும் ஒரு சிறுநீரகம் அரியூர் நாராயணி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு கண்களும் தானமாக பெற்றுக்கொள்ளப்பட்டன. இதையடுத்து, சத்யாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  சத்யாவின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவரது மறைவு 6 பேருக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r