"எனக்கு தெரியாமா எப்படி கர்ப்பமானாய்?" கேள்வி கேட்ட கணவனை குத்திக் கொன்ற மனைவி

 
murder

விழுப்புரத்தில் கணவன் - மனைவி இடையேயான தகராறில் பட்டப்பகலில் கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.

Andhra Pradesh: Man murders three of his family members in Proddaturu of  Kadapa

விழுப்புரம் நகரம் நாயக்கன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 38). கொத்தனார் வேலை செய்து வரும், இவருடைய மனைவி சுரேகா (வயது 36). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சுரேகா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கணவருக்கு மனைவி மீது  சந்தேகம் ஏற்பட்டு எனக்கு தெரியாமல் நீ எப்படி கர்ப்பம் ஆனாய் என்று, சந்தோஷ் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இருவருக்கும் இன்று பிற்பகலில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் வீட்டில் இருந்த கத்தியால் கணவர் சந்தோசை மனைவி சுரேகா வயிறு, மார்பு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் குத்தி கொலை செய்துள்ளார்.  இதனை தொடர்ந்து சந்தோஷ் வீட்டிலேயே சம்பவ இடத்தில் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் சந்தோஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவரை கொலை செய்த ரேகாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.