கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மிளகாய் பொடி தூவி கொன்ற கள்ளக்காதலன்

 
murder

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவனை மிளகாய் பொடி தூவி கொன்ற கள்ளக்காதலனின் வெறிச்செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி அருகே உள்ள என்.தட்டக்கல் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் கந்தன் என்பவருக்கும், கமக்காலப்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு சந்திஸ், சர்வேஸ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கந்தன் டிரைவராக வேலைசெய்து வந்துள்ளார். 

இந்நிலையில் கணவன் அடிக்கடி வண்டிக்கு வீட்டை விட்டு சென்று விட்ட நிலையில், கணவனின் அன்பு கிடைக்காமல் பாசத்துக்கு ஏங்கிய சந்தியாவுக்கு பால் பாக்கெட் வாங்கி கொடுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான சிவசக்தி என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்த நிலையில் இந்த விவகாரம் கந்தனுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் மனைவியின் நடத்தையில் சந்தேகித்து கண்காணித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரது மனைவின் செல்போனை பிடுங்கி பார்த்தபொழுது சிவசக்தியிடம் சந்தியா வாட்ஸ் அப்பில் பேசி வீடியோ கால் பேசியது தெரியவந்தது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு கந்தன் வண்டி டிரைவராக செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்ற நிலையில் கணவன் வீட்டில் இல்லை என அறிந்த சந்தியா அவரது காதலன் சிவசக்தியை வீட்டிற்கு அழைத்துள்ளார். 

இந்நிலையில் கந்தன் வண்டிக்கு செல்லாமல் இரவு 10 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது வீட்டில் சிவசக்தி இருந்ததை கண்ட கந்தன் மனைவியுடன் தகறாரில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கந்தன் அவரது மனைவியை தாக்கிய நிலையில், இதனால் ஆத்திரமடைந்த சிவசக்தி மற்றும் சந்தியா சமையல் அறையில் இருந்த மிளகாய் பொடியை கந்தனின் கண்ணில் தூவியுள்ளனர். பின்னர் வாயை இருக்க மூடி சிவசக்தி மற்றும் சந்தியா இருவரும் பலமாக தாக்கி உள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த காய்கறிகள் வெட்டும் கத்தியின் மூலம் நெஞ்சு மட்டும் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளனர். 

கந்தனின் மார்பு பகுதியில் சுமார் 25 இடங்களுக்கு மேல் குத்தியுள்ள நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த கந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கந்தனின் நண்பர் வசந்த், கந்தனின் மனைவி மற்றும் அவரது கள்ளகாதலனான சிவசக்தி இருவரது செல்போனையும் பிடுங்கி போலீசார் வரும் வரை சந்தியாவை பிடித்து வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் கந்தனின் மனைவி சந்தியா, அவரது காதலன் சிவசக்தி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.