நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட கணவர்

 
murder

திருக்கோவிலூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மனைவி இறந்த துக்கத்தில், தானும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட கணவரின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Twin brothers fall to death from 25th floor of Ghaziabad high rise | Delhi  news

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே முதலூர் கிராமத்தில் வசித்து வருபவர் லோகநாதன். கூலித்தொழிலாளி இவரது மனைவி பேபி. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் லோகநாதன் மனைவி பேபி நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இரவு 10 மணிக்கு லோகநாதன் மனைவி பேபியிடம் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறியதால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த லோகநாதன் மனைவியை பேபி அருகிலிருந்த கத்தியால் சரமாரியாக குத்தியதில் ரத்தவெள்ளத்தில் விழுந்த பேபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி இறந்த துக்கத்தில் லோகநாதன் விஷமருந்தி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து பேபியின் அக்கா சரோஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்