கணவன் தனது பேச்சை கேட்காததால் மனைவி தற்கொலை

 
suicide

சென்னையை அடுத்த வளசரவாக்கத்தில் மனைவியின் பேச்சை கணவன் கேட்காததால் தொலைக்காட்சி தொடர் இயக்குனரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide

வளசரவாக்கம், அன்பு நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் நாகரத்தினம்(47), இவர் தொலைக்காட்சி தொடர் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி(37), இவர்களுக்கு திருமணமாகி நவினேஷ்(15), சாய் ஆதர்ஷ்(8), என இரண்டு மகன்கள் உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான கோயம்புத்தூர் சென்று விட்டு பிள்ளைகளை ஊரிலேயே விட்டு, விட்டு கணவன் மனைவி மட்டும் சென்னை வந்துள்ளனர். 

இந்நிலையில் வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து தொழிலில் முதலீடு செய்யுமாறு மனைவி கூறி வந்த நிலையில், நாகரத்தினம் நகைகளை விற்று விட்டு தொழில் முதலீடு செய்வதை விட சொந்த ஊரில் நிலம் வாங்கலாம் என கூறியுள்ளார். இதனால் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை படப்பிடிப்பு முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது மீண்டும் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

suicide

நாகரத்தினம் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு ஊரிலிருந்து வந்த தனது மகன்களை அழைத்து வர சென்று விட்டு பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அறையில் பத்மாவதி தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வளசரவாக்கம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன பத்மாவதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். நகைகளை விற்று தொழிலில் முதலீடு செய்யலாம் என மனைவி கூறியதாலும் அதற்கு கணவன் மறுத்ததால் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.