தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான Guidance TN-யில் பணியாற்றி வந்த 15 பேர் நீக்கம் ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி

 
anbumani

கைடன்ஸ் தமிழ்நாடு (Guidance Tamil Nadu) என்பது தமிழ்நாடு அரசின் முதன்மை முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒற்றைச் சாளர வசதி அமைப்பாகும். 1992-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இது, தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் முதலீட்டாளர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் அனுமதிகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.


இந்நிலையில் தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான 'கைடன்ஸ் தமிழ்நாடு' (Guidance TN) அமைப்பிலிருந்து 15 பணியாளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.


 தமிழகத்தின் முதலீடுகள் தொடர்பான ரகசியத் தகவல்கள் ஆந்திரப் பிரதேசத்திற்குக் கசிந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில், தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனத்திலிருந்து 15 அதிகாரிகள்/பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 3 முன்னாள் பணியாளர்கள், ஆந்திரப் பிரதேசத்தின் முதலீட்டு வாரியத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


'கைடன்ஸ் தமிழ்நாடு' அமைப்பிலிருந்து 15 பணியாளர்கள் நீக்கப்பட்டது ஏன் என்றும், அவர்களில் 3 பேர் ஆந்திராவுடன் கைகோர்த்ததைத் தமிழக அரசு வேடிக்கை பார்த்தது ஏன் என்றும் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.