நடிகை சனம் ஷெட்டியின் கையிலிருந்த மைக் பிடுங்கப்பட்டது ஏன்? இடும்பாவனம் கார்த்திக் அதிரடி விளக்கம்!

 
1

 நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செய்தி தொடர்பாளர் இடும்பாவனம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

 “தான் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை என்றும், நேற்றுதான் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்ததாகவும் சனம் ஷெட்டி மேடையில் கூறியபோது, அங்கு கூடியிருந்த கூட்டம் ஆர்ப்பரிக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், மாணவர் நலனுக்காகவும் நீட் ரத்துக்காகவும் கூடியிருந்த மேடையில், சம்பந்தமே இல்லாமல் திரைப்படத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும் என அங்கிருந்த ஒட்டுமொத்தக் கூட்டமும் எதிர்ப்புத் தெரிவித்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்துப் பேசாமல், அங்கு கூடியிருந்த மாணவர்களையும் போராட்டக்காரர்களையும் தேவையின்றிச் சீண்டும் விதமாகப் பேசியதன் காரணத்தினாலேயே அமைப்பாளர்கள் அவரிடமிருந்து ஒலிவாங்கியை (Mic) திரும்பப் பெற்றார்கள்; அவ்வளவே தவிர இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை” என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். சனம் ஷெட்டி வெளியிலும் ஊடகங்களுக்குப் பேட்டியளித்து இந்த விவகாரத்தைப் பூதாகரமாக்க முயற்சிப்பதாக அவர் சாடியுள்ளார்.

தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை வைத்துக்கொண்டு, அதனைப் பெருமையோடு சமூகத்தில் சொல்லித் திரியும் அந்தப் பெண்மணி, போராட்ட மேடையைப் பயன்படுத்திச் செய்தது மிக மிக மலினமான ‘கவன ஈர்ப்பு அரசியல்’ (Attention Seeking Politics) என்றும் இடும்பாவனம் கார்த்திக் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். மாணவர்களின் உண்மையான போராட்ட வீரியத்தைக் குலைக்கும் வகையில் செயல்படுபவர்களைப் போராட்டக் களம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்றும் அவர் தனது பதிவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.