அன்பில் மகேஷ் கைது ஏன்? பின்னணி என்ன?
தி.மு.க ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார்.
திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக திமுக செய்தி தொடர்பு துணை தலைவர் பிடி அரசகுமார் மீது லஞ்சப் புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் பிடி அரசகுமாரை கடந்த ஜூன் மாதம் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பிடி அரசகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் அண்மையில் ரெய்டு நடத்தப்பட்டது. ரெய்டின் போது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது.
ரெய்டை தொடர்ந்து அன்பில் மகேஷ்க்கு சம்மன் அனுப்பி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். 3 மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையின் போது முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் மனு தாக்கல் செய்தார். அன்பில் மகேஷ்க்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து இன்று காலையில் உத்தரவு பிறப்பித்தது. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மாலையில் கைது செய்தனர்.

