தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏன்? - ஆட்சியர் விளக்கம்..

 
தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏன்? - ஆட்சியர் விளக்கம்..


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அடுத்தடுத்த சுற்றுகளில் வாக்கு நிலவரம் விரைவில் வெளியாகும் என ஈரோடு மாவட்ட ஆட்சியரும்,  தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கிருஷ்ணனுன்னி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் தான் அறிவிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை எனவும்,  வெளிப்படைத்தன்மையுடனே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்..

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த 27ம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழலில்  இரண்டு சுற்றுகள் முடிந்தும் , வேட்பாளர்கள் எவ்வளவு வாக்குகளை பெற்றுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இதனையடுத்து  வாக்கு எண்ணும் மையத்திற்குள் செய்தியாளர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்ததால்,  செய்தியாளர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு இடைத்தேர்தல்  முடிவு

இதனை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியாளருமான கிருண்னனுன்னி செய்தியாளர்களை சந்தித்து பேச்சுவர்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது, “வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மைக்கில் அறிவிக்கப்படும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளர்கள் எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளனர் என்பது முறையாக சரிபார்க்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும். தேர்தல் முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என்பதைவிட, சரியாக சரிபார்த்துவிட்டு  வெளியிட வில்லை என்றால் அதுவும் பிரச்சனை ஆகும். 

முதல் சுற்று மட்டுமே தாமதமாகும்.  அடுத்தடுத்த சுற்றுகளில் வாக்கு நிலவரம் விரைவில் வெளியாகும். தேர்தல் முடிவுகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் தான் அறிவிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.. வெளிப்படைத்தன்மையுடனே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கைமேசையும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. முஇடுவ்களாஇ முறையாக சரிபார்த்து அறிவிப்பதில் சற்று தாமதம் ஏற்படும். பின்னர் முறையாக அரிவிக்கப்படும்”இவ்வாறு அவர் கூறினார்.