நகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு!

நகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு!

சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலர்களாக முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோர் பணியாற்றினர். அந்தப் பகுதியில் பாதி ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் இருந்த நகைக்கடையை கண்ட இவர்கள், ஊரடங்கு காலத்தில் எப்படி கடையைத் திறக்கலாம் எனக் கூறி அங்கிருந்த நகை, பணத்தை எடுத்துக் கொண்டு வரும்படி கூறியுள்ளனர். பின்னர், அங்கு வந்த உதவி ஆய்வாளர், காவலர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பிறகு பணத்தை எண்ணி பார்த்த கடை உரிமையாளர், 5 லட்சம் ரூபாய் குறைந்ததைக் கண்டறிந்தார்.

நகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு!
நகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு!

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது. போலீசார் இருவரும் பணத்தை பாக்கெட்டில் வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

பணத்தை திருடிய காவலர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யாதது ஏன்? காவலர்களுக்கு எதிராக வழக்கு பதிந்து, கைது நடவடிக்கை எடுக்காத காவல் நிலைய ஆய்வாளர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்பது குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு, மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.