LPG எதுக்கு..?? எத்தனால் அடுப்பு வாங்கிக்கோங்க - நிதின் கட்கரி வலியுறுத்தல்..!!
May 26, 2026, 12:41 IST1779779508397
நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, "எல்பிஜி-யை விடக் குறைந்த செலவில் எத்தனால் மூலம் இயங்கக்கூடிய ஒரு புதிய கேஸ் அடுப்பு சந்தைக்கு வரவுள்ளது.
இதில் 7 சதவீதம் தண்ணீரை எத்தனாலுடன் கலந்து உங்களால் அடுப்பை எரிக்க முடியும். இது சாதாரண எல்பிஜி கேஸ் போன்றே எரியும். வணிகரீதியான எல்பிஜி சிலிண்டர்களை விட இது மிகவும் மலிவானது.
இது மண்ணெண்ணெய் மற்றும் பாரம்பரிய கேஸ் சிலிண்டர்களை விடப் பாதுகாப்பானது மற்றும் மாசற்றது" என்று தெரிவித்துள்ளார்.
வாகனங்களுக்கு அடுத்தபடியாக, தற்போது இந்த எத்தனால் பயன்பாட்டை இந்திய சமையலறைகளுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

