டெல்டாக்காரன் என்று பட்டம் சூட்டிக்கொண்ட ஸ்டாலின், விவசாயிகள் பற்றிய அக்கறை இல்லாமல் இருப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி..!

 
1

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:

தஞ்சை மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், விவசாயிகள் பெயரில் மோசடியாக வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்; ஆலை நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது போன்ற வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, கும்பகோணம் செல்லும் வழியில் முதல்வர் ஸ்டாலினுக்கு, கருப்புக்கொடி காட்டிய விவசாயிகளை, அரசு கைது செய்துள்ளது.

டெல்டாக்காரன் என்று பட்டம் சூட்டிக்கொண்ட ஸ்டாலின், விவசாயிகள் பற்றிய அக்கறை இல்லாமல் இருப்பது ஏன்? தொடர்ந்து, 1,000 நாட்களுக்கு மேலாக, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.

கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்து, இந்த பிரச்னை தொடர்பாக விவசாயிகள் மீது, தி.மு.க., அரசு எந்த வழக்கும் தொடரக்கூடாது.

Advertisement

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.