சில ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை திணிக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

 
1

அமைச்சர் தியாகராஜன் அளித்த பேட்டி ஒன்றில், ' இரு மொழிக் கொள்கையால், கல்வியில் மிகச்சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. மும்மொழிக் கொள்கை உள்ள மாநிலங்களில் எத்தனை குழந்தைகளுக்கு 3 மொழிகள் தெரியும். இரு மொழிக் கொள்கை அமலில் தமிழகத்தில் உள்ள கல்வி முறையை விட சிறந்தது என மும்மொழிக் கொள்கை அமலில் உள்ள மாநிலங்கள் ஏதாவது ஒன்றை கூற முடியுமா'எனக்கூறியிருந்தார்.
 

இதனை மேற்க்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 'எக்ஸ்' சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: நமது நிலைப்பாட்டை அமைச்சர் தெளிவாக விளக்கி உள்ளார். தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கும்போது,ஒரு சில ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை திணிக்க வேண்டும் எனக்கேள்வி எழுப்பி உள்ளார்.