விஜயின் ரசிகர்கள் என்பதற்காக எங்கள் மீது ஏன் இத்தனை வெறுப்பு? நடிகை மீஷா கோஷல் ஆதங்கம்..!!
நடிகை மீஷா கோஷல் தனது சமூக வலைதள பதிவில் மீஷா கோஷல் கூறியதாவது: "தங்களுக்கு பிடித்த ஹீரோவின் படத்தை பார்ப்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமும், உரிமையும் ஆகும். தளபதி விஜயின் ரசிகர்கள் என்பதற்காக எங்கள் மீது ஏன் இத்தனை வெறுப்பு? நாங்கள் அப்படி என்ன தவறு செய்தோம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், "வேறு எந்த ஹீரோவின் ரசிகர்களாக இருந்தாலும் இதுபோல் பேசுவீர்களா? நான் விஜய் ரசிகை என்பதற்காக என்னை சமூக வலைதளங்களில் 'Unfollow' செய்ய விரும்பினால் தாராளமாக செய்துகொள்ளுங்கள், எங்களுக்கு பிடித்த நடிகரை கொண்டாடுவதும், அவரது படத்தை பார்ப்பதும் எங்கள் விருப்பம். அதற்காக எங்களை குற்றவாளிகளைப் போல சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. 'ஜனநாயகன்' திரைப்பட வெளியீட்டையும், மாணவர் போராட்டத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்துவது முற்றிலும் அர்த்தமற்றது," என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகை மீஷா கோஷலின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

