அமைச்சரவை மாற்றம் ஏன்? முதலமைச்சர் விளக்கம்!!

 
stalin

ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள  நிகழ்ச்சியில் இன்று பதவியேற்ற புதிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்றார்.

tn

இந்நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் தொழில் முதலீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், "தொழில் துறை நிகழ்ச்சியில்தான் நான் அதிகமாக கலந்து கொண்டுள்ளேன்; நிதியமைச்சராக பதவியேற்றிருக்கும் தங்கம் தென்னரசுக்கும், தொழில்துறை அமைச்சராக பதவியேற்றிருக்கும் டி.ஆர்.பி.ராஜாவிற்கும் வாழ்த்துகள். புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள டி.ஆர்.பி ராஜா சிறப்பாக செயல்பட்டு அதிகம் முதலீட்டை ஈர்ப்பார் என்று உறுதியாக நம்புகிறேன், அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே தமிழக அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது.அமைச்சர்களின் இலாகாக்கள் மாறினாலும், தொழில் துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் தொடரும்" என்றார். 

mk stalin

தொடர்ந்து பேசிய அவர், வாகன தயாரிப்பில் நாட்டிலேயே  தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது;மின்வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வமான செயல்பாடே முக்கிய காரணம்; மின் ஊர்தி வாகன உற்பத்தியிலும் தமிழ்நாட்டை தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது; தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா சிறப்பாக செயல்படுவார் என உறுதியளிக்கிறேன் என்றார்.