“உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியது ஏன்?” – மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

“உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியது ஏன்?” – மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படும் எம்.டெக். பாடப்பிரிவுகள் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மத்திய அரசின் 49.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் நடந்துவந்தது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதனால்,எம்.டெக். பிரிவில் உயிரி தொழில்நுட்பவியல், கணக்கீட்டு தொழில்நுட்பம் ஆகிய 2 படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்துவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

“உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியது ஏன்?” – மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இச்சூழலில் எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் 49.5 சதவீதத்துடன், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கும் (EWS) 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன. அப்போதே இது விதிமீறல் என விமர்சனம் எழுப்பப்பட்டது.

“உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியது ஏன்?” – மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. “மாநில அரசு அமல்படுத்தாத நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கிய ஏன்? ஏன் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள்” என்று கூறி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தங்களின் வசதிக்கு ஏற்ப மாற்றி செயல்படுத்த விரும்பினால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாகப் பதிலளிக்க அண்ணா பல்கலைக் கழகத்துக்கும் மத்திய அரசுக்கும் ஆணையிட்டுள்ளது.