#ELECTION UPDATE : தேர்தலில் வாகை சூடப்போவது யார்..?

 
Q Q

பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும்.

 

இந்நிலையில், 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்படி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. காலை 9 மணியில் இருந்து முன்னிலை நிலவரம் தெரிய வரும்.

 

 

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக வாக்குகள் (67.13 சதவீதம்) பதிவான நிலையில், ஆட்சியை பிடிக்க தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

 

கடந்த 2020 பேரவைத் தேர்தலில் 15 தொகுதிகளில் (தேசிய ஜனநாயக கூட்டணி -125, இந்தியா -110) ஆட்சியை தவற விட்டது இந்தியா கூட்டணி. தற்போது தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணியே மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என கணிப்பு வெளியாகி இருந்தது

.பீகார் சட்டசபை தேர்தல்: ஆட்சி அதிகாரம் யாருக்கு - தற்போதய முன்னணி நிலவரம்

தேசிய ஜனநாயக கூட்டணி - 75

இந்தியா கூட்டணி - 50

ஜன் சுராஜ் - 3

மற்றவை - 2