தமிழகத்தை அடுத்த ஆளப்போவது யார்? கருத்துக்கணிப்புகளில் கடும் போட்டி..!

 
1

 234 தொகு​தி​களுக்​கான வாக்கு எண்​ணிக்கை 62 மையங்​களில் வரும் மே 4-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்​கு​கிறது. அன்று பிற்​பகலுக்​குள் யார் ஆட்​சி​யில் அமர்​வார் என்​ப​தற்​கான முடிவு​கள் தெரிய வரும். இதற்​கிடை​யில் நேற்று மாலை 6.30 மணிக்கு தேர்​தலுக்​குப் பிந்​தைய கருத்​துக் கணிப்பு முடிவு​கள் வெளி​யா​யின.

 

இதில் தமிழகத்​தைப் பொறுத்​தவரை பல்​வேறு நிறு​வனங்​களின் கணிப்​பில் பெரும்​பாலும் திமுக ஆட்​சி​யைத் தொடரும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

குறிப்​பாக சாணக்​கியா ஸ்ட்​ராடஜிஸ், என்​டிடி​வி, ரிபப்​ளிக் டிவி கருத்​துக் கணிப்​பின்​படி திமுக தலை​மையி​லான கூட்​டணி பெரும்​பான்மை இடங்​களைப் பெறும் எனவும், டைம்ஸ் நவ், சிஎன்​என் கணிப்​பில் அதி​முக ஆட்​சி​யைப் பிடிக்​கும் எனவும், இந்​தியா டுடே முடிவு​களில் தவெக முன்னிலை வகிக்​கும் என்றும், காமாக்யா கணிப்​பில் தொங்கு சட்​டப்​ பேரவைக்கான வாய்ப்​பு இருப்​ப​தாக​ கூறப்​பட்​டுள்​ளது.