பொங்கல் பணம் ரூ.3000 யாருக்கெல்லாம் கிடைக்கும்..? யாருக்கு கிடைக்காது..?
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி மற்றும் சேலை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வழக்கம் உள்ளது. அந்தவகையில் இந்த 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கில் பரிசு தொகுப்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு ஆகிய பொருள்களுடன் ரூ. ரூ.3000 தொகையை ரொக்கமாக வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.
யாருக்கெல்லாம் கிடையாது
இந்தாண்டு பொங்கல் பரிசு தொகை ரூ.3,000 மற்றும் பொருள்களின் தொகுப்பு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தான் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சர்க்கரை ரேஷன் அட்டை (Sugar Cards) வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பொருட்கள் கிடைக்காது. மேலும் கௌரவ ரேஷன் அட்டைதாரர்கள் எனப்படும் வெறும் அடையாளத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படாது.
யாருக்கெல்லாம் கிடைக்கும்
அரசின் இந்த பொங்கல் பரிசு தொகுப்பானது, மொத்தம் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு மொத்தம் ரூ.6936,17,47,959 செலவில் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


