தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் ..? வெளியான போல் ட்ராக்கர் கருத்துக்கணிப்பு..!

 
1

தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சில கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன. பொதுவாகவே எந்த மாநிலங்களிலும் தேர்தல் நடந்தாலும், இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் எடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக சில சர்வேக்கள் எடுக்கப்பட்டு, அது சம்பந்தமான முடிவுகளும் வெளியாகி அரசியல் களத்தில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது.


அந்த வகையில், போல் ட்ராக்கர் (Poll Tracker) இன்று வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணி 42.7% வாக்கு விகிதத்துடன் 172 முதல் 178 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக கூட்டணி 30.3%  வாக்குகளுடன் 46 முதல் 52 இடங்களைப் பிடித்து இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என கணித்துள்ளது.

தவெக 6 முதல் 12 இடங்கள் வரை வென்று, 19.2% வாக்குகளைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாம் தமிழர் கட்சி 0 முதல் 2 இடங்கள் வரை மட்டுமே பெறும் என்றும், 5.1% வாக்குகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் சேர்த்து 2.7% வாக்குகள் மட்டுமே பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியே முன்னிலையில் இருக்கிறது என்பதை போல் ட்ராக்கர் (Poll Tracker) கருத்துக் கணிப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது.