அடுத்த பிரதமர் யார்?- வெளியான கருத்துக்கணிப்பு : விஜய்க்கு எத்தனை சதவீதம் ஒட்டு கிடைத்தது தெரியுமா.?
Aug 29, 2026, 05:40 IST1787962227000
இந்தியாவின் அடுத்த பிரதமராக யாரை மக்கள் தேர்வு செய்ய விரும்புகின்றனர் என்ற ‘இந்தியா டுடே – சி வோட்டர்’ கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், பிரதமர் நரேந்திர மோடி 48.7 சதவீத ஆதரவுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 27.1 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதனிடையே, தமிழக முதலமைச்சர் விஜய் 9.2 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தையும், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளனர்.
இந்த கருத்துகணிப்பு, நாடு முழுவதும் 25 ஆயிரத்து 184 பேரிடம் நேரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் அடுத்த பிரதமராக மற்ற தலைவர்களைவிட கணிசமான முன்னிலையில் மோடி இருப்பது, கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

