தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார்..? இன்று விருப்பமனு தாக்கல்... 12 ஆம் தேதி தேர்தல்..!

 
1

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியிருந்தார். இதே போன்று நயினார் நாகேந்திரனும் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. இதன் காரணமாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் இப்போது தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் தேர்தலும் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்மனு தாக்கல் குறித்து பாஜக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுவதற்கான விருப்பமனு வரவேற்கப்படுகிறது.

இந்த பதவிக்கான தேர்தலுக்கு விருப்பமனுக்கள் கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்திலிருந்து பதவிறக்கம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இன்று 11ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையில் மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்பமனுவை மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், 12 ஆம் தேதி மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தலைவருக்கான தேர்தலுக்கான தகுதி:

மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவர்கள் படிவம் F பூர்த்தி செய்ய வேண்டும். மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும். இவரை கட்சியில் தேர்வு செய்யப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடம் இருந்து எழுத்து பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரை வேண்டும்.

தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல்:

தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் E பூர்த்தி செய்ய வேண்டும். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன் மொழிய மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய வேண்டும் என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.