ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடியை உடைத்தது யார்?- விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை

 
ச்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைத்ததில் அரசியல் இல்லை என திருவான்மியூர் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

அ

சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். சமீப நாட்களாக தவெக தலைவர் விஜய்யையும், அவரது அரசியல் குறித்தும் ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கும் சென்று தவெக தலைவர் விஜய்யின் அரசியலை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் தவெக தொண்டர்களும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடியை அடையாளம் தெரியாத நபர்கள் உடைக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து அவர் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில், தன்னுடைய கார் கண்ணாடி உடைப்பட்டு சேதப்படுத்தப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை. இன்று மதியம் நான் ஒரு உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் கார் கண்ணாடியை உடைத்தது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பெண் ஒருவர் வீட்டுக்குள் செல்ல முடியாத நிலையில், குறுக்கே ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடியை உடைத்துள்ளார் என திருவான்மியூர் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.