தேவை வெள்ளை அறிக்கை! 31% பொதுப்போட்டி பிரிவின் பிரதிநிதித்துவம் யார், யாருக்கு?

 
pmk

பொதுப்போட்டி பிரிவில் உள்ள 31% இட ஒதுக்கீட்டில் எந்தெந்த சாதியினருக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார் .

PMK

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் , தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள 31% இட ஒதுக்கீடு பொதுப்போட்டி. இது அனைவருக்கும் பொதுவானது.

இந்த பொதுப்போட்டி பிரிவில் உள்ள 31% இட ஒதுக்கீட்டில் எந்தெந்த சாதியினருக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது என்பது குறித்த உண்மைகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.அதற்காக அதுகுறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.