தமிழகத்தின் புதிய டிஜிபி யார்?… டெல்லிக்கு விரைந்த தலைமை செயலாளர்!

 

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்?… டெல்லிக்கு விரைந்த தலைமை செயலாளர்!

தமிழகத்திற்கு புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

தமிழக டிஜிபியாக இருந்து வரும் திரிபாதி வரும் 30-ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். சீனியாரிட்டி அடிப்படையில் டிஜிபி தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திரிபாதிக்கு அடுத்தபடியாக சீனியாரிட்டி வகிக்கும் அதிகாரிகளின் பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்?… டெல்லிக்கு விரைந்த தலைமை செயலாளர்!

டெல்லி யுபிஎஸ்சி அலுவலகத்தில் புதிய டிஜிபி தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் அக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.

டிஜிபிக்கு தேர்வு செய்யப்பட உள்ள பட்டியலில் தற்போது இடம்பெற்றிருப்பவர்கள் சைலேந்திரபாபு, கரன்சின்ஹா, பிரதீப் பிலிப் மற்றும் சஞ்சய் அரோரா. இவர்களுள் ஒருவர் தான் 30ஆவது டிஜிபியாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.