2026 கூட்டணி யாருடன்? ஜனவரி 5-ல் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் முக்கிய ஆலோசனை..!
Jan 2, 2026, 05:45 IST1767312908000
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 5-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி? என்பது இறுதி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? என்பது குறித்தும் மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளதாம்.


