யாரு சாமி இவன்..? 10 மணிக்கு முதல் சம்பளம்.. 10.05க்கு ராஜினாமா செய்த ஊழியர்..!
காலை 10 மணிக்கு வங்கிக் கணக்கில் சம்பளம் வந்த நிலையில், சரியாக 10.05-க்கு ராஜினாமா செய்த ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலைக்குச் சேர்ந்த முதல் மாத சம்பளம் வந்த 5 நிமிடத்தில், ராஜினாமா மெயிலை அனுப்பிவிட்டு வெளியேறியுள்ளார். இந்தச் சம்பவம் நியாயமா என Linkedinதளத்தில் HR ஒருவர் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதுபோன்ற திடீர் ராஜினாமாக்கள், நிறுவனத்திற்கு பெரும் இழப்பையும், பணியாளர் நியமனம் மற்றும் பயிற்சிக்கு செலவிடப்பட்ட நேரத்தையும், வளங்களையும் வீணாக்குகின்றன. ஒரு ஊழியர் நிறுவனத்தில் சேரும்போது, நீண்டகால பணிக்கு உறுதிமொழி அளிக்கிறார். ஆனால், முதல் சம்பளம் பெற்ற உடனேயே அவர் வெளியேறுவது, தொழில்முறை நெறிமுறைகளை மீறுவதாக கருதப்படுகிறது.
இந்தச் சம்பவம், பணியாளர்களை தக்கவைத்துக்கொள்வதற்கான சவாலை நிறுவனங்களுக்கு உணர்த்துகிறது. பணியாளர்களுக்கு சிறந்த பணிச்சூழல், சரியான ஊதியம் மற்றும் அங்கீகாரம் அளிப்பதன் மூலம் மட்டுமே, இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்க முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.


